/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'தி.மு.க., கூட்டணியில் ம.தி.மு.க., நீடிக்கும்'
/
'தி.மு.க., கூட்டணியில் ம.தி.மு.க., நீடிக்கும்'
ADDED : ஜூன் 07, 2025 03:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்:ஒட்டன்சத்திரத்தில் ம.தி.மு.க., எம்.பி., துரை கூறியதாவது: பொது செயலாளர் வைகோ கோவையிலும் நான் ஒட்டன்சத்திரத்திலும் திருமணத்தில் கலந்து கொண்டதால் தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களின் ராஜ்யசபா தேர்தல் மனு தாக்கலில் பங்கேற்க முடியவில்லை.
ம.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கையெழுத்து போட்டுள்ளனர். ராஜ்யசபா சீட் கொடுக்காததால் மன வேதனையில் உள்ளோம். அனைத்தையும் கடந்து செல்வோம். 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் நீடிப்போம் என்றார்.