/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநியில் மனைவி, மகளுடன் மெக்கானிக் தற்கொலை
/
பழநியில் மனைவி, மகளுடன் மெக்கானிக் தற்கொலை
ADDED : அக் 24, 2024 02:18 AM

பழநி:பழநியில் மனைவி, மகளுடன் எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக் தற்கொலை செய்து கொண்டார் .
பழநி முல்லை நகரை சேர்ந்தவர் இளங்குமரன் 58. எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் பழுது நீக்கும் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி ரேணுகாதேவி 54. அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர். இவர்களுக்கு 12ம் வகுப்பு படிக்கும் மகள் தேன்மொழி 17, கோவை தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் மகன் வினித் 24, உள்ளனர்.
நேற்று முன்தினம் மாலை ரேணுகாதேவி, மகள் தேன்மொழி பள்ளிக்கு சென்று வீட்டிற்கு வந்துள்ளனர். நேற்று காலை முதல் கதவு திறக்கவில்லை. வினித் தொலைபேசியில் தொடர்பு கொண்டும் பதில் இல்லாததால் வீட்டின் அருகில் உள்ளவர்களிடம் கூறி உள்ளார். அவர்கள் வீட்டிற்கு சென்று பார்த்த போது உட்புறம் தாழிடப்பட்ட நிலையில் இருந்தது.
அங்கு வந்த போலீசார் வீட்டின் உள் சென்று பார்த்தபோது ஒரு அறையில் ரேணுகா தேவியும், தேன்மொழியும் இறந்து கிடந்தனர். மற்றொரு அறையில் இளங்குமரன் துாக்கிட்ட நிலையில் கிடந்தார்.
மகளும், மனைவியும் விஷம் குடித்து இறந்தார்களா , கடன் தொல்லையால் இருவரையும் கணவர் கொலை செய்து விட்டு துாக்கில் தொங்கினாரா என போலீசார் விசாரிக்கின்றனர்.

