/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்
/
குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்
ADDED : ஆக 04, 2025 04:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்:' திண்டுக்கல் சொசைட்டி தெரு லட்சுமணபுரம் 'ஹெலன் ஓ கிராடி' இன்டர்நேஷனல் மழலையர் பள்ளியில் 10 வயது உட்பட்ட குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
இதில், குழந்தைகள் நல மருத்துவர் கார்த்திகேயன், குழந்தைகள் பேச்சுத்திறன் மருத்துவர் சுகந்தி ஆகியோர் கலந்து கொண்டு, பல், கண், ஊட்டச்சத்து, பேச்சுத்திறன், இயன்முறை, செயல்முறை தடுப்பூசி, குழந்தைகள் வளர் திறன் பரிசோதனைகளுக்கு ஆலோசனை வழங்கினர். 35 க்கும் மேற்பட்ட குழந்தைகள் முகாமில் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் கவிதா ரவிச்சந்திரன் செய்திருந்தார்.