நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாணார்பட்டி; அ.தி.மு.க., இளம் பெண்கள் பாசறை, கோபால்பட்டி ஐயன் பல் மருத்துவமனை இணைந்து முன்னாள் முதலமைச்சர் பழனிசாமி பிறந்தநாளை முன்னிட்டு பொது மருத்துவ முகாம் நடத்தியது.
முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். மாநில ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன், முன்னாள் எம்.எல்.ஏ., பரமசிவம், ஒன்றிய செயலாளர்கள் ராமராசு, சுப்ரமணி, எம்.ஜி.ஆர்., மன்ற நிர்வாகி ஆண்டிச்சாமி கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை இளம் பெண்கள் பாசறை நிர்வாகிகள் ஜெயக்குமார், மணிகண்டன், அரவிந்த், விக்ரம் செய்திருந்தனர்.