/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
/
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
ADDED : ஜன 22, 2025 08:53 AM

பழநி : பழநி கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் 25 ஆண்டுகளுக்குப் பின் கும்பாபிஷேகம் நடைபெற்றது
பழநி கிரிவீதி சன்னதி வீதி சந்திப்பில் பாத விநாயகர் கோயில் அருகே கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் சுவாமி கோயில் உள்ளது.
சில மாதங்களாக புனரமைக்கும் பணிகள் நடைபெற்ற நிலையில் கும்பாபிஷேகம் பூஜைகள் துவங்கின. யாக சாலையில் நான்கு கால வேள்வி பூஜைகள் நடைபெற்றது.
வேள்வி பூஜையில் வைக்கப்பட்ட கலச நீர் பிரகாரம் சுற்றி எடுத்து வர மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் இரு சன்னதிகளுக்கும் 25 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து, அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியன் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்
வத்தலக்குண்டு: கண்ணாபட்டியில் சங்கரப்ப நாடார் பங்காளிகளுக்கு பாத்தியப்பட்ட அய்யனார் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
இதையொட்டி முதல் நாள் யாகசாலை பூஜை கணபதி ஹோமத்துடன் துவங்கியது.
புண்யாகவாஜனம், நவக்கிரக, லட்சுமி பூஜைகள் நடந்தன. அன்று மாலை வாஸ்து சாந்தி, ரட்சாபந்தனம், தீபாரதனை, கலச கும்ப பூஜையுடன் முதல் கால யாக பூஜை நிறைவடைந்தது.
நேற்று காலை இரண்டாம் கால யாக பூஜை கோபூஜையுடன் துவங்கியது. திரவியாஹூதி, பூர்ணாஹூதி, யாத்ரா தானம் நடந்தது.
புனித நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தங்கள் கோயிலை வலம் வர கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை கண்ணாபட்டி விசாலாட்சி அம்மன் கோயில் சிவாச்சாரியார் விசுவநாதன் நடத்தினார். அன்னதானம் நடந்தது.