ADDED : மார் 11, 2024 06:31 AM
திண்டுக்கல்: தமிழ்நாடு ஆய்வக நுட்புனர்கள் ஒன்றியத்தின் மாநில உயர் நிலைக் கூட்டம் திண்டுக்கல் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாவட்ட கூட்ட அரங்கில் நடந்தது. மாநில தலைவர் கார்த்திகேய வெங்கடேசன் தலைமை வகித்தார்.
மாவட்ட தலைவர் சக்திதாஸ் வரவேற்றார். மாநில பொது செயளாலர் அழகு ராஜ சேகர், பொருளாளர் மோகன்ராஜ் முன்னிலை வகித்தனர்.
மாநில ஒருங்கிணைப்பாளர் துரைசாமி பேசினார். தலைமை நிலைய செயலர் வெண்ணிலா,மாநில துணை தலைவர்கள் இசக்கிமுத்து, ஜோயல், ரபீக், மாநில மகளிரணி துணை தலைவர் திருவாசுகி பங்கேற்றனர்.
பொது சுகாதார துறையில் ஆய்வக நுட்புநர்கள் 2000 நபர்களுக்கு அரசின் கொள்கை விதிகளுக்கு புறம்பாக கட்டாய பணி இட மாற்றத்தை தடை செய்யுமாறு முதல்வருக்கு கோரிக்கை மனு அளிக்க வேண்டும்.
ஆய்வக நுட்புனர்கள்களுக்கு திணிக்கப்பட்ட, திருத்தி அமைக்கப்பட்ட பணி பட்டியலை அரசு ஆணையுடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

