UPDATED : ஆக 20, 2026 10:09 PM
ADDED : ஆக 20, 2026 08:01 PM
அ நிறம் | அளவு
நிலக்கோட்டை:நிலக்கோட்டை அரசு பெண்கள் கல்லுாரி, நிலவை அகாடமி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் கிராமப்புற வறிய குடும்பங்களை சேர்ந்த மாணவிகளுக்கு திறன் பயிற்சி, தொழிற்கல்வி, தொழிற்பயிற்சி வழங்குதல், அரசு பணிக்கான போட்டித்தேர்வுகளுக்கு தயார் செய்தல், உயர்கல்வி வாய்ப்புகள், விளையாட்டு பயிற்சி, உதவித்தொகை வழங்குதல் ஆகியவை மாணவிகளுக்கு கிடைக்கப்பெறும்.
கல்லுாரி முதல்வர் சீனிவாசன், பேராசிரியர்கள் சின்னச்சாமி, லதா, நிலவை அகாடமி சாதிக்அலி, காமராஜ், மோகன்ராஜ், சதீஷ்குமார், விக்டர் பங்கேற்றனர்.
