தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மாவட்டத்தில் மிதமான மழை

மாவட்டத்தில் மிதமான மழை

மாவட்டத்தில் மிதமான மழை


UPDATED : ஆக 20, 2026 07:38 PM

ADDED : ஆக 20, 2026 07:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 20, 2026 07:38 PM ADDED : ஆக 20, 2026 07:22 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திண்டுக்கல்:காலநிலை மாற்றத்தின் காரணமாக பருவம் தவறி மழை, வெயில் நீடிக்கிறது. ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழைக்காலம் துவங்கியும் சுற்றுச்சுழல் மாறுபாடு காரணமாக வெயில் சுட்டெரித்தது.

தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, மேற்கு திசைக் காற்று மாறுபாடு காரணமாக திண்டுக்கல் உள்பட மாவட்டத்தின் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் அறிவித்திருந்தது.

அதன்படி திண்டுக்கல்லில் நேற்று மிதமான மழை பெய்தது. சில நாட்களாக கண்ணாமூச்சி காட்டி வந்த நிலையில் 15 நிமிடங்கள் பெய்ததால் பகல் வெப்பம் தணிந்து பூமி குளிர்ந்தது.

மாவட்டத்தில் கொடைக்கானல், வத்தலக்குண்டு, சின்னாளப்பட்டி, நத்தம் என பிற பகுதிகளிலும் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us