/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அச்சுறுத்தும் மேல்நிலை குடிநீர் தொட்டிகள்.. சீரமைக்கலாமே! பராமரிப்பு இல்லாததால் பாழாகும் அவலம்

ADDED : பிப் 21, 2024 06:01 AM

மாவட்டம் முழுவதும் நீரை சேமிக்க ஆங்காங்கே பெரியளவிலான உயர் மட்ட குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் பயன்பாட்டில் உள்ள உயர் மட்ட குடிநீர் தொட்டிகள் படிக்கட்டுகள்,தொட்டியின் நடுப்பகுதிகள்,கான்கிரீட்கள் சேதமடைந்து இடியும் நிலையில் உள்ளது. குடிநீர் தொட்டிகளின் அருகில் குடியிருப்புகள், அதன் அடிப்பகுதியில் உள்ள கட்டடங்களில் அங்கன்வாடி மையங்களும் ஆபத்தான முறையில் செயல்படுகிறது.
மழை நேரங்களில் சேதமான தண்ணீர் தொட்டிகளின் பாகங்கள் இடிந்து விழுகின்றன. இதை பார்க்கும் மக்கள் அச்சப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். உள்ளாட்சி அமைப்புகளுக்கு புகார்கள் கொடுத்தாலும் நடவடிக்கை எடுக்காது அதிகாரிகள் மவுனம் காக்கின்றனர்.
விபத்துக்கு வழிவகுக்கும் இதுபோன்ற சேதமான உயர் மட்ட குடிநீர் தொட்டிகளை மராமத்து செய்ய உள்ளாட்சிகள் முன் வர வேண்டும். இந்தபிரச்னையால் சேதமான தொட்டிகள் அருகே வசிப்பவர்கள் அச்சத்துடனே வசிக்கும் நிலை ஏற்படுகிறது.
மாவட்ட நிர்வாகம்தான் இதன்மீது கவனம் செலுத்த வேண்டும்.