ADDED : டிச 14, 2024 05:29 AM

பழநி : பழநியில் தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரவையின் நான்காம் ஆண்டு துவக்க விழா பொதுக்குழு கூட்டம் தமிழ்நாடு வணிகர் தலைவர் விக்ரமராஜா தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் ஜே.பி சரவணன் முன்னிலை வகித்தார். எம்.எல்.ஏ ., செந்தில்குமார், மாநிலத் துணைத் தலைவர் ஹரிஹரமுத்து அய்யர், மாநில இணைச் செயலாளர் பாஸ்கரன், கவுரவ தலைவர் கண்ணுச்சாமி, மாவட்ட செயலாளர் செந்தில்குமார், ஜெகதீஷ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், பழனிச்சாமி, சம்பத், ரஹ்மத்துல்லாஹ், மாவட்ட பொருளாளர் ரம்யா கிருஷ்ணன், மாவட்ட செய்தி தொடர்பாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட கவுரவ ஆலோசகர் கார்த்திகேயன் கலந்து கொண்டனர்.
வாடகை கட்டங்களுக்கான வாடகைக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி., நடைமுறைப்படுத்தக் கூடாது.
அடிவாரம் கிரி விதி, சிறு வணிகர்களின் வாழ்வாதாரத்திற்கு வணிக வளாகம் அமைக்க வேண்டும். நகராட்சி கடைகளில் உரிமத்தை 12 ஆண்டாக உயர்த்தியதற்கு தமிழக முதல்வர் மற்றும் வணிகர் சங்க தலைவருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

