ADDED : டிச 12, 2024 05:42 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட  முக்கிய நகர்களில்  வணிகர் சங்கம்  சார்பில்  ஆர்ப்பாட்டம்,கடையடைப்பு  நடந்தது.
மத்திய அரசின் கடைகளின் வாடகை மீதான 18 சதவீதம் ஜி.எஸ்.டி.,வரி விதிப்பை திரும்ப பெற வேண்டும். மாநில அரசு ஆண்டு தோறும் 6 சதவீதம் கூடுதல் சொத்து வரி விதிப்பை திரும்ப பெற வேண்டும். வணிக உரிம கட்டண உயர்வு,தொழில் வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு,திண்டுக்கல் மாவட்ட தொழில் வர்த்தகர் சங்கம் சார்பில் திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட மண்டல தலைவர் கிருபாகரன் தலைமை வகித்தார். செயலாளர் நஜீர் சேட் முன்னிலை வகித்தார். பொருளாளர் கருணாகரன் நன்றி கூறினார்.
பழநியில்  பஸ் ஸ்டாண்ட் அருகே  மாநில துணைத்தலைவர் ஹரிஹரமுத்து அய்யர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.   மாநில இணைச்செயலாளர் பாஸ்கரன், மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட பொருளாளர் செந்தில் குமார், செய்தி தொடர்பாளர் ஜெகதீஷ்   கலந்து கொண்டனர்.
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரத்தில்   நடந்த ஆர்ப்பாட்டம்  கடையடைப்பு போராட்டம் சங்கத் தலைவர் சுப்பிரமணி தலைமையில் நடந்தது. செயல் தலைவர் வஞ்சிமுத்து,  செயலாளர் தணிகாசலம், பொருளாளர் முகமது மீரான்,  செய்தி தொடர்பாளர் பழனி குமார்,  செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தங்கச்சி அம்மாபட்டி காந்தி காய்கறி மார்க்கெட் காய்கனி கமிஷன் கடை உரிமையாளர்கள் சங்கம், ஜவுளி வியாபாரிகள் சங்கம், திண்டுக்கல் மாவட்ட பால் பொருட்கள் உற்பத்தியாளர்கள்   விற்பனையாளர்கள்  கலந்து கொண்டனர்.

