/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கருணை காட்டுவாரா வருண பகவான்: போதிய மழையின்றி கிணறுகளில் குறைகிறது நீர்மட்டம்: பயிர்களை காப்பாற்ற முடியாத கவலையில் விவசாயிகள்

UPDATED : செப் 26, 2024 06:48 AM
ADDED : செப் 26, 2024 05:37 AM

மாவட்டத்தில் விவசாயமே முக்கிய தொழிலாக உள்ளது. காய்கறி , பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் அதிகமாக பயிரிடப்பட்டு வருகிறது. பருவ மழை காலத்தில் பெய்யும் மழையால் நீர்நிலைகளில் நிரம்பும் நீரை கொண்டு வேளாண் தொழில் சிறப்புற நடந்து வருவது உண்டு.
ஆனால் சில ஆண்டுகளாக போதிய அளவு பருவ மழை பெய்யாததால் மாவட்டத்தில் உள்ள பல குளங்கள், நீர்த்தேக்கங்களுக்கு தண்ணீர் வரத்து குறைவாக உள்ளது.
பெரும்பாலான அணைகளில் நீர்மட்டம் குறைவாக உள்ளது. இதனால் அணைகளின் கீழ் பயனடையும் நீர்நிலைகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படவில்லை.
மழை நீர் இன்னும் எட்டி கூட பார்க்காத குளங்கள் பல உள்ளன. சில குளங்கள் கால் பகுதி அளவு மட்டும் நிரம்பி உள்ளது.
கடந்த ஆண்டு ஏற்பட்ட நீர்வரத்தே பெரும்பாலான குளங்களில் இன்னும் உள்ளது. சுட்டெரிக்கும் வெயில் காரணமாக இவையும் வற்றி வருவதால் விவசாய கிணறுகளில் நீர்மட்டம் குறைந்து வருகிறது. விளை பயிர்களை காப்பாற்ற முடியுமா என்ற சந்தேகமும் விவசாயிகளிடம் நிலவுகிறது.
இதே நிலை நீடித்தால் வேளாண் தொழில் செய்வது மிகவும் சிரமம் என்பதாலும் கவலை அடைந்துள்ளனர்.