/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மெருகேறும் புத்தக திருவிழா எம்.பி.,சச்சிதானந்தம் பேச்சு
/
மெருகேறும் புத்தக திருவிழா எம்.பி.,சச்சிதானந்தம் பேச்சு
மெருகேறும் புத்தக திருவிழா எம்.பி.,சச்சிதானந்தம் பேச்சு
மெருகேறும் புத்தக திருவிழா எம்.பி.,சச்சிதானந்தம் பேச்சு
ADDED : அக் 21, 2024 05:23 AM
திண்டுக்கல்: ''ஒவ்வொரு ஆண்டும் புத்தகத்திருவிழா மெருகேறிக் கொண்டே இருக்கிறது''என,திண்டுக்கல் எம்.பி.,சச்சிதானந்தம் பேசினார்.
திண்டுக்கல் மாவட்ட நிர்வாகமும், இலக்கிய களமும் இணைந்து டட்லி மேல் நிலைப்பள்ளி மைதானத்தில் நடத்தும் புத்தகத் திருவிழாவில் அவர் பேசியதாவது: ஒவ்வொரு ஆண்டும் புத்தகத்திருவிழா மெருகேறிக் கொண்டே இருக்கிறது.
அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத்திருவிழா நடத்த வேண்டுமென அரசு முனைப்பு காட்டுகிற நல்ல அரசு தமிழகத்தில் உருவாகியிருக்கிறது.
எனவே மரம் வளர்ப்பை நாம் பிரதானமாக மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.
அரசுத்துறைகள், பல நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள் இந்த புத்தகத்திருவிழா வெற்றியடைய பல பங்களிப்பை செய்துள்ளனர் என்றார். உதவி ஆணையர் (கலால்) பால்பாண்டி தலைமை வகித்தார்.
இலக்கியக்கள நிர்வாக செயலர் கண்ணன் வரவேற்றார்.
மாவட்ட கல்வி அலுவலர் உஷா வாழ்த்தினார். பொருளாளர் மணிவண்ணன் நன்றி கூறினார். நேற்றோடு புத்தக திருவிழா நிகழ்ச்சிகள் முடிந்தது.

