இலவச சைக்கிள் வழங்கும் விழா
நத்தம்: - துரைக்கமலம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டி அம்பலம் வழங்கினார். தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் ரத்தினக்குமார், பழனிச்சாமி, நகர செயலாளர் ராஜ்மோகன் முன்னிலை வகித்தனர். பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார்சாமி, நகர தலைவர் சரவணன் கலந்து கொண்டனர்.தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.
மருத்துவ முகாம்
கொடைரோடு : அம்மையநாயக்கனுார் ராஜதானிக்கோட்டை பள்ளி மாணவர்கள் 8 பேருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு தெரிய உரிய சிகிச்சை அளித்ததால் குணமடைந்தனர். மேலம் 30க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்தி பரவ சிறப்பு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.மாவட்ட சுகாதார அலுவலர் செல்வகுமார் தலைமையில், வட்டாட்சியர் விஜயலட்சுமி முன்னிலையில் மருத்துவ அலுவலர் வினோத், சுகாதார ஆய்வாளர் அடங்கிய 5 மருத்துவ குழு சோதனை நடத்தியது.
மண்டல பூஜை
நத்தம்: - அரண்மனை சந்தனக் கருப்பு சுவாமி கோயில் கும்பாபிஷேகம் தொடர்ந்து 48-ம் நாள் மண்டல பூஜை நடந்தது. யாகசாலைகள், 16 வகையான அபிஷேகம், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதுபோல் குட்டூர் முத்தாலம்மன் கோயிலிலும் 48-ம் நாள் மண்டல பூஜை நடந்தது.

