sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

செய்தி சில வரிகளில்...

/

செய்தி சில வரிகளில்...

செய்தி சில வரிகளில்...

செய்தி சில வரிகளில்...


ADDED : ஜன 03, 2024 06:39 AM

Google News

ADDED : ஜன 03, 2024 06:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அ.தி.மு.க.,வில் மாற்றுக்கட்சியினர்

நத்தம்: வேம்பார்பட்டியில் மாற்றுக் கட்சியினர் அ.தி.மு.க.,வில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. அ.தி.மு.க., துணை பொது செயலாளரும் முன்னாள் அமைச்சருமான நத்தம் விஸ்வநாதன் முன்னிலையில் ,புதுப்பட்டி ஊராட்சி விஜயபாஸ்கர், பழனிச்சாமி, பாலு, அழகர், சின்ன கருப்பு ஆகியோர் தலைமையில் 50க்கு மேற்பட்டோர் மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி அ.தி.மு.க.,வில் இணைந்தனர். மாநில ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன், நத்தம் தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மதுரை மண்டல இணைச்செயலாளர் தினேஷ் குமார் கலந்து கொண்டனர்.

பஞ்சமி வழிபாடு

சின்னாளபட்டி :தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு காந்திகிராமம் வெள்ளியங்கிரி ஓடையில் உள்ள தண்டினி வாராகி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. திருமஞ்சனம், 16 வகை திரவிய அபிஷேகம் நடந்தது. விசேஷ மலர் அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. சுற்று கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

உலக நல வேள்வி

திண்டுக்கல் : திண்டுக்கல் அறிவுத்திருக்கோயிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு உலக நல வேள்வி நடந்தது. எஸ்.எஸ்.எம். பொறியியல் கல்லுாரி முதல்வர் செந்தில்குமரன் பேசினார். உலக சமுதாய சேவா சங்க மண்டல தலைவர் எம்.கே.தாமோதரன்,செயலாளர் பாலசுந்தர், அறிவுத்திருக்கோயில் செயலாளர் பழனிசாமி,பொருளாளர் மோகனவேலு,மூத்த பேராசிரியர் நளினி தாமோதரன் பங்கேற்றனர்.

ஆங்கில புத்தாண்டில் பிறந்த 15 குழந்தைகள்

திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் ஜன.1ல் 7 ஆண்,8 பெண் குழந்தைகள் பிறந்தது. பெற்றோர்கள் டாக்டர்கள்,நர்சுகள்,அக்கம் பக்கத்தினருக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். ஆங்கில புத்தாண்டில் குழந்தை பிறந்ததால் இனி குழந்தை பிறந்தநாளை உலகமே கொண்டாடும் என பெற்றோர் கூறினர்.

ஜன.7ல் மாவட்ட செஸ் போட்டி

ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்ட சதுரங்க கழகம், கான்பிடன்ட் செஸ் அகாடமி இணைந்து நடத்தும் மாவட்ட செஸ் போட்டி ஒட்டன்சத்திரம் கிறிஸ்டியன் இன்ஜினியரிங் கல்லூரியில் ஜன.7ல் நடக்கிறது. வயது அடிப்படையில் 9,12,15,21 பிரிவுகளில் இந்த போட்டி நடக்கிறது. விருப்பமுள்ளவர்கள் 97878 66583 ல் ஜன. 6 மாலை 5:00 மணிக்குள் முன்பதிவு வேண்டும் என செஸ் அகாடமி செயலாளர் சண்முககுமார் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us