ADDED : அக் 23, 2024 04:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்தலக்குண்டு,: தோட்டக்கலை உதவி இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி அறிக்கை : மா, கொய்யா, முருங்கை நடவு வயல்களில் நீர் தேங்காத வகையில் வடிகால் வசதி செய்திட வேண்டும்.
இதன் மூலம் பயிரின் வேர் பகுதியில் பூஞ்சான வேர் அழுகல் நோய், பிற நோய் தாக்குதலை கட்டுப்படுத்த முடியும். மரத்தின் அடிப்பகுதியில் மண்ணைக் குவித்து வைக்க வேண்டும். பூஞ்சான் உயிர்க்கொல்லி மருந்துகளை வேர்ப்பகுதியில் இட்டு நோய் வராமல் தடுக்க வேண்டும். வடிகால் வசதி செய்ய வேண்டும். வாழைத்தார்களை முறையான பைகள் கொண்டு மூடி வைக்க வேண்டும். தொடர் மழையின் போது உரம் இடுதலை தவிர்க்கவேண்டும்.

