/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் கொண்டாட்டம்
/
மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் கொண்டாட்டம்
ADDED : ஜன 18, 2024 06:23 AM

திண்டுக்கல் : அ.தி.மு.க., நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆரின் 107 வது பிறந்தநாள் விழா திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள சிலை அருகே கொண்டாடப்பட்டது. மாநகராட்சி எதிர் கட்சித் தலைவர் ராஜ்மோகன் தலைமை வகித்தார். பகுதி செயலாளர்கள் மோகன், சேசு, சுப்பிரமணி, முரளி, மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜசேகரன் முன்னிலை வகித்தனர். அமைப்புச் செயலாளர் மருதராஜ் எம்.ஜி.ஆர்.,சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அ.தி.மு.க., கொடி ஏற்றப்பட்டது. மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இளைஞர் - இளம் பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம், மாவட்ட துணைச் செயலாளர் பிரேம்குமார், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாரதி முருகன், மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜன், முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன், மாவட்ட கலை பிரிவு செயலாளர் ரவிக்குமார், சார்பு அணி நிர்வாகிகள் திவான் பாட்ஷா, ஜெயபால், ஜெயராமன், பழனிச்சாமி கலந்து கொண்டனர்
ஒட்டன்சத்திரம் :ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்ட் முன்பு எம்.ஜி.ஆர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கப்பட்டது. அ.தி.மு.க., நகரச் செயலாளர் எஸ்.நடராஜன் தலைமை வகித்தார். கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.பிநடராஜ், மேற்கு ஒன்றிய செயலாளர் பி.பாலசுப்பிரமணி, துணைச் செயலாளர் செல்வராஜ், திண்டுக்கல் மேற்கு மாவட்ட பொருளாளர் எஸ்.ஏ.பழனிவேல், தொப்பம்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் அப்பன் கருப்புசாமி, மேற்கு ஒன்றிய செயலாளர் சண்முகராஜ், கீரனுார் பேரூர் செயலாளர் குப்புசாமி, தொகுதி பொதுக்குழு உறுப்பினர் உதயம்ராமசாமி, கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் சண்முகவேல், மேற்கு மாவட்ட மீனவர் அணி செயலாளர் கே.பி.வி. மனோகரன், எம்ஜிஆர் மன்ற தலைவர் வி.எஸ். பாண்டியன், செயலாளர் எஸ்.ராஜா, ஜெ., பேரவை செயலாளர் குப்புசாமி, தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கே.காமாட்சி ராஜா கலந்து கொண்டனர்.
* அ.ம.மு.க., சார்பில் எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கப்பட்டது. மேற்கு மாவட்ட செயலாளர் கே.பி.நல்லசாமி தலைமை வகித்தார். நகரச் செயலாளர் கே சுப்ரமணி, வடக்கு ஒன்றிய செயலாளர் பி. முருகேசன், தெற்கு ஒன்றிய செயலாளர் கே.சுப்பிரமணி, மாவட்ட ஜெ.,பேரவை செயலாளர் குமாரசாமி, மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு செயலாளர் ஜமால்தீன், தொப்பம்பட்டி ஒன்றிய செயலாளர் சிவராஜ், பொதுக்குழு உறுப்பினர் காளியப்பன், நகர அவைத் தலைவர் செல்வம், நகர துணை செயலாளர் ஆர்.வி.ஜி.கஜேந்திரன், நகர பொருளாளர் ஏ.எஸ்.ஆர். ராமமூர்த்தி, மாவட்ட விவசாய அணை செயலாளர் தங்கவேல், நகர விவசாய அணி செயலாளர் செல்லத்துரை, இளைஞர் பாசறை செயலாளர் ஜீவா, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் சண்முகவேல், துணைச் செயலாளர் சேனாதிபதி, வர்த்தக அணி செயலாளர் கணேஷ் கலந்து கொண்டனர்.
*வடமதுரை : வடமதுரை ஒன்றியத்தில் அ.தி.மு.க., சார்பில் நடந்த விழாவில் மாநில இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் பழனிச்சாமி, ஒன்றிய செயலாளர் தண்டாயுதம், மதுரை மண்டல ஐ.டி., பிரிவு தலைவர் கோகுல்கவுதம், எம்.ஜி.ஆர்., மன்ற நகர செயலாளர் நாகராஜ் பங்கேற்றனர்.
*கொடைக்கானலில் நகர செயலர் ஸ்ரீதர் தலைமையில் நடந்தது. துணை செயலர் ஜாபர் சாதீக், எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலர் பிச்சை, கவுன்சிலர்கள், அ.தி.மு.க., நிர்வாகிகள் கலந்து கொண்டனர். எம்.ஜி.ஆர்., படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இனிப்பு வழங்கப்பட்டன.
*வத்தலக்குண்டு ஓ.பி.எஸ்., அணியினர் எம்.ஜி.ஆர்., உருவப்படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்குவதாக முடிவு செய்திருந்தனர். இதை அறிந்த அ.தி.மு.க., சேர்ந்த பிச்சை காமராஜபுரத்தில் பொதுமக்களுக்கு வெஜிடபிள் பிரியாணி வழங்கினார். இதையறிந்த ஓ.பி.எஸ்., அணியை சேர்ந்த முனியாண்டி விலாஸ் ரத்தினம் பிரியாணி வழங்கினார்.