/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் கொண்டாட்டம்
/
எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் கொண்டாட்டம்
ADDED : ஜன 18, 2025 07:26 AM

திண்டுக்கல் : முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் ., பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திண்டுக்கல் மேற்கு மாவட்ட அ.தி.மு.க.,சார்பில் பஸ்ஸ்டாண்ட் அருகில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு அமைப்புச் செயலாளர் மருதராஜ் ,மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் ராஜ்மோகன் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மாநகர பகுதி செயலாளர் மோகன், சேசு, சுப்பிரமணி, முரளி, ஒன்றிய செயலாளர் ராஜசேகரன், முன்னாள் மாநிலபொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன் ,மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஜெயபாலன், தலைவர் பழனிச்சாமி, அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஜெயராமன், முன்னாள் ஆவின் தலைவர் திவான் பாட்சா, ஜெயலலிதா பேரவை சின்னு பிரபு, மருத்துவர் அணி ராஜசேகரன் கலந்து கொண்டனர். மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜன் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது.
வேடசந்துார்: ஆத்துமேட்டில் அ.தி.மு.க., மேற்கு ஒன்றியம்,வேடசந்துார் பேரூர் சார்பில் எம்.ஜி.ஆர்., உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பேரூர் செயலாளர் பாபுசேட் தலைமை வகித்தார். மேற்கு ஒன்றிய செயலாளர் ஜான்போஸ் முன்னிலை வகித்தார். மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கார்த்தி, பேரூர் ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆறுமுகம், நிர்வாகிகள் தண்டபாணி, கதிர்வேல், சந்திரசேகர், புஷ்பா பங்கேற்றனர்.
சின்னாளபட்டி: ஆத்துார் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் சின்னாளபட்டி, ஆலமரத்துப்பட்டியில் நடந்த விழாவிற்கு ஒன்றிய செயலாளர் மயில்சாமி தலைமை வகித்தார். கொடி ஏற்றி இனிப்பு,ஏழைகளுக்கு வேட்டி, சேலை வழங்கல் நடந்தது. மாவட்ட துணை செயலாளர் விஜயபாலமுருகன், வர்த்தக அணி கிரஷர் பாலு, மாநில பொதுக்குழு உறுப்பினர் சுகன், அவைத்தலைவர் பழனிச்சாமி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அருள் வெண்ணிலா பங்கேற்றனர்.
ரெட்டியார்சத்திரம்: கிழக்கு, மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் செவனக்கரையான்பட்டி, தர்மத்துப்பட்டி, மூலச்சத்திரம், கன்னிவாடி, தெத்துப்பட்டி காலனி, மேலப்பட்டி உள்ளிட்ட இடங்களில் ஒன்றிய செயலாளர் ஆர்.கே.சுப்ரமணி தலைமை வகித்தார்.
சித்தையன்கோட்டை: மாவட்ட மாணவரணி சார்பில் நடந்த விழாவிற்கு மாவட்ட செயலாளர் கோபி தலைமை வகித்தார். பேரூர் செயலாளர் முகமது அலி, ஒன்றிய மாணவரணி செயலாளர் முகமது ஹாஜியார், நிர்வாகிகள் அக்பர் அலி, பேரூராட்சி முன்னாள் துணை தலைவர் ரமேஷ்குமார் பங்கேற்றனர்.
-வடமதுரை : வடமதுரை ஒன்றியத்தில் இளைஞர் இளம்பெண் பாசறை செயலாளர் பரமசிவம், எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் பழனிச்சாமி, ஐ.டி.,பிரிவு கோகுல்கவுதம், செந்தில்குமார், விவசாய அணி செல்லபாண்டியன், நகர செயலாளர் ராகுல் பாபா, அவைத் தலைவர் பழனியப்பன், நிர்வாகிகள் ஆறுமுகம், முரளி, ஒன்றிய துணை செயலாளர் மலையாண்டி, முன்னாள் ஒன்றிய தலைவர் ராஜசேகர் பங்கேற்றனர்.
ஒட்டன்சத்திரம்: பஸ் ஸ்டாண்ட் முன்பு நடந்த நிகழ்ச்சியில நகர செயலாளர் எஸ்.நடராஜன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் பி.பாலசுப்பிரமணி, என்.பி.நடராஜ் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் பழனிவேல், மீனவரணி மனோகரன், ஒன்றிய செயலாளர்கள் அப்பன் கருப்புசாமி, முருகேசன், பொதுக்குழு உறுப்பினர் உதயம் ராமசாமி, ஒன்றிய துணை செயலாளர்கள் எஸ்.செல்வராஜ், சண்முகவேல், இளைஞரணி தவமணி, வழக்கறிஞரணி சுப்பிரமணி, தொழில்நுட்ப பிரிவு சீரா பாலா, இளைஞரணி வீரமணிகண்டன், தமிழ்வாணன், மீனவரணி மோகன்ராஜ் கலந்து கொண்டனர்.
சாணார்பட்டி: - கொசவபட்டியில் மாநில ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன், ஒன்றிய செயலாளர் ராமராசு தலைமை வகித்தனர். ஜெ பேரவை சுப்பிரமணி, மேட்டுக்கடை செல்வராஜ், இளைஞர் அணி இளம்வழுதி, வர்த்தக அணி ஹரிஹரன், ஜெ.பேரவை விஜயன், சிறுபான்மை பிரிவு அந்தோணி பங்கேற்றனர் .
நத்தத்தில் மாநில ஜெ பேரவை இணை செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார்.
ஒன்றிய செயலாளர்கள் ராமராசு, மணிகண்டன், ஜெ பேரவை ஜெயபாலன், முன்னாள் கவுன்சிலர்கள் சின்னாக்கவுண்டர், பார்வதி, மாணவரணி அசாருதீன்,அவைத் தலைவர்கள் பிறவிக் கவுண்டர்,சேக்ஒலி, நகர்பொருளாளர் சீனிவாசன், எம்.ஜி.ஆர் மன்றம் ராமமூர்த்தி, குப்பான் கலந்து கொண்டனர்.
பழநி: விசுவாசம் அறக்கட்டளை தலைவர் ராஜா முகமது தலைமை வகித்தார் . இளைஞரணி அன்வர்தீன், ரவி மனோகரன் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.பி., குமாரசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., வேணுகோபாலு, நகர செயலாளர் முருகானந்தம், ஒன்றிய செயலாளர்கள் மாரியப்பன், முத்துச்சாமி கலந்து கொண்டனர்.