ADDED : ஜன 19, 2026 06:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னாளபட்டி: ஆத்துார் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில், பிள்ளையார் நத்தத்தில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா நடந்தது.
மாநில ஜெ., பேரவை இணைச் செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். கட்சிக் கொடி ஏற்றி வைத்து, இனிப்புகள் வழங்கப்பட்டன. ஏழைகளுக்கு வேட்டி, சேலை வழங்கப்பட்டது.
ஒன்றியச் செயலாளர் மயில்சாமி, மாவட்ட மாணவரணிச் செயலாளர் கோபி, வர்த்தக அணி செயலாளர் பாலு, மாநில பொதுக்குழு உறுப்பினர் சுகன், ஒன்றியக் கவுன்சிலர் அருள் வெண்ணிலா பங்கேற்றனர்.

