/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நுாற்பாலை வேன் கவிழ்ந்து விபத்து; 13 பேர் காயம்
/
நுாற்பாலை வேன் கவிழ்ந்து விபத்து; 13 பேர் காயம்
ADDED : ஜூலை 20, 2025 05:01 AM

குஜிலியம்பாறை: திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே நுாற்பாலை வேன் கவிழ்ந்ததில் 13 பேர் காயமடைந்தனர்.
பாளையத்தை சேர்ந்தவர் தனியார் நுாற்பாலை வேன் டிரைவர் மணிகண்டன் 34. டி.கூடலுார் தனியார் நுாற்பாலையிலிருந்து நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு 13 தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு குஜிலியம்பாறை நோக்கி வந்தார்.
டி.கூடலுார் தனியார் அரிசி ஆலை அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த வேன் ரோட்டோர பள்ளத்தில் கவிழ்ந்தது. குஜிலியம்பாறை சுற்றுப்பகுதியை சேர்ந்த விஜயலட்சுமி 29, தாமரைச்செல்வி 23, உஷா 42, செல்வி 40, படுகாயமடைந்தனர். மற்ற 9 பேர் லேசான காயமடைந்தனர். குஜிலியம்பாறை போலீசார் விசாரிக்கின்றனர்.