/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
துாய்மை நகராட்சிகளின் பட்டியலில் ஒட்டன்சத்திரம் முதல் இடத்திற்கு வரும் அமைச்சர் சக்கரபாணி தகவல்

ADDED : அக் 19, 2025 03:17 AM

ஒட்டன்சத்திரம்: ''துாய்மை நகராட்சிகளின் பட்டியலில் ஒட்டன்சத்திரம் முதல் இடத்திற்கு வரும்'' என அமைச்சர் சக்கரபாணி பேசினார்.
ஒட்டன்சத்திரம், பழநி நகராட்சிகள் ,ஊராட்சி பகுதிகளை சேர்ந்த 1053துாய்மை பணியாளர்களுக்கு இனிப்புகள், புத்தாடைகள், மளிகை பொருட்களை வழங்கிய அவர் பேசியதாவது:
துாய்மை பணியாளர்களின் பணி என்பது மிக முக்கியமான பாராட்டுதலுக்கான பணியாகும். தமிழ்நாட்டில் உள்ள 145 நகராட்சிகளில் ஒட்டன்சத்திரம் நகராட்சி 11வது இடத்தில் தூய்மையான நகராட்சி என்ற பெயர் பெற்றதற்கு இங்கு பணியாற்றும் பணியாளர்களே காரணமாகும். எதிர் வரும் காலங்களில் ஒட்டன்சத்திரம் நகராட்சி குப்பையில்லா நகராட்சியாக முதல் இடத்திற்கு வரும், என்றார்.
கலெக்டர் சரவணன், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் திலகவதி, ஆர்.டி.ஓ., கண்ணன், உதவி திட்ட அலுவலர் பிரபாகரன், தாசில்தார் சஞ்சய் காந்தி, பி.டி.ஓ.,க்கள் பிரபு பாண்டியன், காமராஜ், நகராட்சி தலைவர் திருமலைச்சாமி, துணைத் தலைவர் வெள்ளைச்சாமி, நகராட்சி கமிஷனர் ஸ்வேதா, பொதுக்குழு உறுப்பினர் கண்ணன், ஒன்றிய செயலாளர் ஜோதீஸ்வரன், தர்மராஜ், நல்ல பாலு கலந்து கொண்டனர்.