/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சிற்றுண்டி திட்டத்தில் 20.7 லட்சம் குழந்தைகள் பயன் அமைச்சர் சக்கரபாணி பெருமிதம்
/
சிற்றுண்டி திட்டத்தில் 20.7 லட்சம் குழந்தைகள் பயன் அமைச்சர் சக்கரபாணி பெருமிதம்
சிற்றுண்டி திட்டத்தில் 20.7 லட்சம் குழந்தைகள் பயன் அமைச்சர் சக்கரபாணி பெருமிதம்
சிற்றுண்டி திட்டத்தில் 20.7 லட்சம் குழந்தைகள் பயன் அமைச்சர் சக்கரபாணி பெருமிதம்
ADDED : டிச 07, 2024 06:44 AM

திண்டுக்கல்: 'காலை சிற்றுண்டி திட்டத்தில் 20.70 லட்சம் குழந்தைகள் பயனடைகின்றனர்''என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேசினார்.
ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினருக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் திட்டத்தை காணொலிக்காட்சி வாயிலாக முதல்வர் தொடங்கி வைத்தார்.
இதன் தொடர்ச்சியாக திண்டுக்கல் எஸ்.எஸ்.எம்.,கல்லுாரியில் நடந்த விழாவில்அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது: அம்பேத்கர் நினைவு தினத்தில் சென்னையில் முதல்வர் ஸ்டாலின் துாய்மைப் பணியாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி, தொழிலாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றிடவழிவகை ஏற்படுத்தினார். தொப்பம்பட்டி ஊராட்சியில் 100 வீடுகளுடன் சமத்துவபுரம் உருவாக்கப்படுகிறது. அரசு,அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் 20.70 லட்சம் குழந்தைகள் பயனடைகின்றனர் என்றார்.
அம்பேத்கர் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது. பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் துாய்மைப் பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
கலெக்டர் பூங்கொடி தலைமை வகித்தார். பழநி எம்.எல்.ஏ., செந்தில்குமார், மேயர் இளமதி முன்னிலை வகித்தனர்.
மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் பாஸ்கரன், துணைமேயர் ராஜப்பா, ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சிவகுருசாமி, நகராட்சி தலைவர் திருமலைச்சாமி, ஒன்றியக்குழுத் துணைத்தலைவர் ராஜேஸ்வரி தமிழ்ச்செல்வன் பங்கேற்றனர்.