/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தி.மு.க., 7வது முறையாக ஆட்சி அமைக்கும் சொல்கிறார் அமைச்சர் சக்கரபாணி

ADDED : செப் 16, 2025 04:48 AM
ஒட்டன்சத்திரம்: சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஏழாவது முறையாக தி.மு.க., ஆட்சி அமைப்பது உறுதி '' என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்
ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் தொடங்கப்பட்ட 70 நாட்களில் ஒவ்வொரு வீட்டிலும் மக்களை சந்தித்துள்ளோம். தமிழ்நாடு முழுவதும் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைந்துள்ள குடும்பங்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டி உள்ளது . திண்டுக்கல் மாவட்டத்தில் மூன்று லட்சத்து 34 ஆயிரத்து எட்டு குடும்பங்களை சாதித்துள்ளோம்.
திண்டுக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க., வில் இதுவரை ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 268 குடும்பங்களை சாதித்துள்ளோம்.
ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் இரண்டாம் கட்டம் தொடங்குகிறது.நான்கு ஆண்டுகளாக தி.மு.க., என்னென்ன சாதனைகள் செய்துள்ளது என்பதை மக்களிடம் கூறி உள்ளோம். மத்திய அரசு போதுமான நிதி ஒதுக்கினால் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற தயாராக உள்ளோம்.
தி.மு.க., ஏழாவது முறையாக ஆட்சி அமைப்பது உறுதி என்றார்.