/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தன்னம்பிக்கை, விடாமுயற்சி அவசியம் அமைச்சர் சக்கரபாணி அறிவுரை
/
தன்னம்பிக்கை, விடாமுயற்சி அவசியம் அமைச்சர் சக்கரபாணி அறிவுரை
தன்னம்பிக்கை, விடாமுயற்சி அவசியம் அமைச்சர் சக்கரபாணி அறிவுரை
தன்னம்பிக்கை, விடாமுயற்சி அவசியம் அமைச்சர் சக்கரபாணி அறிவுரை
ADDED : ஏப் 06, 2025 05:21 AM

ஒட்டன்சத்திரம் : கல்லூரி மாணவிகள் தன்னம்பிக்கை, விடாமுயற்சி, குறிக்கோளுடன் படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என அமைச்சர் சக்கரபாணி பேசினார்.
ஒட்டன்சத்திரம் சின்னைகவுண்டன்வலசு அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலை அறிவியல் கல்லுாரியில் நடந்த நான்காவது ஆண்டு விழாவில் அவர் பேசியதாவது: மாணவிகள் கடின உழைப்பு, விடாமுயற்சி, தன்னம்பிக்கையை கடைபிடித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும். உங்கள் எண்ணங்கள் வானத்தை தொடுகின்ற அளவிற்கு இருக்க வேண்டும். கல்லுாரியில் படித்த மாணவிகள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கினார்கள் என்ற பெருமையை நீங்கள் ஏற்படுத்தி தர வேண்டும். கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் 1.18 கோடி மகளிர் பயனடைந்து வருகின்றனர். விடியல் பயண திட்டத்தின் மூலம் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மாதம் தோறும் ரூ. 900 வரை சேமிப்பு ஏற்படுகிறது. புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் பெண்கள் உயர் கல்வி படிப்பது 34 சதவீதம் உயர்ந்துள்ளது. இத்திட்டத்தின் வாயிலாக 5 லட்சம் மாணவிகள் மாதந்தோறும் ரூ.1000 உதவி தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர், என்றார்.
கலெக்டர் சரவணன் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் வாசுகி ஆண்டறிக்கை வாசித்தார். அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியம், இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேஷ், அறங்காவலர்கள் தனசேகர், பாலசுப்பிரமணி, பாலசுப்பிரமணியம், அன்னபூரணி கலந்து கொண்டனர்.

