/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குளங்களில் காவிரி நீரை நிரப்ப ஆய்வு; அமைச்சர் சக்கரபாணி
/
குளங்களில் காவிரி நீரை நிரப்ப ஆய்வு; அமைச்சர் சக்கரபாணி
குளங்களில் காவிரி நீரை நிரப்ப ஆய்வு; அமைச்சர் சக்கரபாணி
குளங்களில் காவிரி நீரை நிரப்ப ஆய்வு; அமைச்சர் சக்கரபாணி
ADDED : மே 18, 2025 03:07 AM

வேடசந்துார்: ''கரூர் காவிரி ஆற்று நீரை குளங்களில் நிரப்ப ஆய்வுப்பணி தொடர்வதாக'' அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
வேடசந்துாரில் நடந்த கலைஞரின் கனவு இல்லம் , ஊரக வீடுகள் பழுதுபார்த்தல் திட்ட பயனாளிகளுக்கு வேலை உத்தரவு வழங்கும் விழாவில் அவர் பேசியதாவது:
கரூர் காவிரி ஆற்று நீரை ராட்சத குழாய்கள் மூலம் கரூர், கிருஷ்ண ராயபுரம், அரவக்குறிச்சி, வேடசந்துார், ஆத்தூர், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், நத்தம் தொகுதிகளில் உள்ள குளங்களை நிரப்பும் நோக்கில் ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம், நீர் வளமும் பெருகும் என்றார். காங்., எம்.பி., ஜோதிமணி, தி.மு.க., எம்.எல்.ஏ., காந்திராஜன், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் வீரா சாமிநாதன், கவிதா, முன்னாள் ஒன்றிய தலைவர் சவுடீஸ்வரி, நகர செயலாளர் கார்த்திகேயன், இளைஞரணி துணை அமைப்பாளர் ரவிசங்கர், காங்., நிர்வாகிகள் சாமிநாதன், சதீஷ் பங்கேற்றனர்.