/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
2.25 கோடி ரேஷன் கார்டுகள் அமைச்சர் சக்கரபாணி
/
2.25 கோடி ரேஷன் கார்டுகள் அமைச்சர் சக்கரபாணி
ADDED : மார் 27, 2025 05:01 AM

கள்ளிமந்தையம்: 'தமிழ்நாட்டில் தற்போது 2..25 கோடி குடும்ப அட்டைகள் உள்ளன என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
ஒட்டன்சத்திரம் தொகுதி பொருளூரிலிருந்து ஒட்டன்சத்திரம் - வாடிப்பட்டி, ஒட்டன்சத்திரம்- தேவத்துார், ஒட்டன்சத்திரம்- மோதுபட்டி ,பழநி- சாலக்கடை, பழநி- கொத்தையம் வழித்தடங்களில் புதிய பஸ்கள் இயக்கத்தை தொடங்கி வைத்த அவர் பேசியதாவது:
கப்பலப்பட்டி முருங்கைக்கு புவிசார் குறியீடு வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 20 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது .தற்போது 2.25 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன. தொப்பம்பட்டியில் ரூ .10 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல் ஒட்டன்சத்திரத்தில் விளையாட்டு மைதானம் அமைக்க அனுமதி பெறப்பட்டுள்ளது என்றார்.
வேளாண் விளைபொருள் விற்பனை கூட்டுறவு சங்கத் தலைவர் ராஜாமணி, நகராட்சித் தலைவர் திருமலைசாமி, துணைத்தலைவர் வெள்ளைச்சாமி, போக்குவரத்து மேலாளர் அர்ஜூனன், தி.முக., ஒன்றிய செயலாளர்கள் ஜோதீஸ்வரன், தர்மராஜன் பொன்ராஜ் கலந்து கொண்டனர்.