/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மகளிர் உரிமைத்தொகை பெற ஸ்டாலின் முகாமில் கூறுங்கள் அமைச்சர் சக்கரபாணி தகவல்

ADDED : ஜூலை 25, 2025 02:58 AM

ஒட்டன்சத்திரம்: ''கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் விண்ணப்பிக்க வேண்டும் ''என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேசினார்.
ஒட்டன்சத்திரம் பெரிய கோட்டை ஒண்டிபொம்மிநாயக்கனுாரில் சமுதாயக்கூடம், பெரியகோட்டையில் நிழற்குடை பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர், ஒட்டன்சத்திரத்தில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனுக்களை பெற்று கொண்டு பேசியதாவது:
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற தகுதி உள்ள விடுபட்ட மகளிர் உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு சென்று விண்ணப்பிக்கலாம். இதில் பயன்பெற தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றார்.
பழநிஆர்.டி.ஓ., கண்ணன், தாசில்தார் சஞ்சய் காந்தி, ஒட்டன்சத்திரம் நகராட்சி தலைவர் திருமலைசாமி ,துணைத்தலைவர் வெள்ளைச்சாமி ,கமிஷனர் சுவேதா கலந்து கொண்டனர்.