/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
53 ஆண்டுகளில் இல்லாத வகையில் நெல் கொள்முதல்
/
53 ஆண்டுகளில் இல்லாத வகையில் நெல் கொள்முதல்
ADDED : ஆக 05, 2025 04:27 AM

ஒட்டன்சத்திரம் : 53 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்தாண்டு 45 லட்சத்து 50 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சாதனை படைத்துள்ளது என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
ஒட்டன்சத்திரத்தில் நடந்த நிகழ்ச்சியில் புதிய ரேஷன் கார்டுகள், கலைஞர் கனவு இல்ல திட்ட பயனாளிகளுக்கு உத்தரவுகளை வழங்கிய அவர் பேசியதாவது:
1972ல் விவசாயிகள் விளைவித்த நெல்லை விற்க முடியாமல் தவித்து வந்தனர்.
அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி தஞ்சை மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகத்தை தொடங்கி விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்ய உத்தரவிட்டார்.
தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகம் தொடங்கி 53 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இந்தாண்டு 45 லட்சத்து 50 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்து நெல் கொள்முதல் செய்து சாதனை படைத்துள்ளது, என்றார்.
கலெக்டர் சரவணன், டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, திட்ட அலுவலர் திலகவதி, பழநி ஆர்.டி.ஓ., கண்ணன், தாசில்தார் சஞ்சய் காந்தி, நகராட்சி தலைவர் திருமலைசாமி, துணைத்தலைவர் வெள்ளைச்சாமி, நகராட்சி கமிஷனர் ஸ்வேதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காமராஜ், பிரபு பாண்டியன், தாகிரா, மாவட்டத் துணைச் செயலாளர் ராஜாமணி, தலைமை செயற்குழு உறுப்பினர் கண்ணன், ஒன்றிய செயலாளர்கள் தர்மராஜ், ஜோதீஸ்வரன், பாலு, சுப்பிரமணி, பொன்ராஜ், தங்கராஜ் கலந்து கொண்டனர்.