/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மருத்துவமனை, ரேஷன் கடை திறப்பு அமைச்சர் சக்கரபாணி திறந்து வைத்தார்
/
மருத்துவமனை, ரேஷன் கடை திறப்பு அமைச்சர் சக்கரபாணி திறந்து வைத்தார்
மருத்துவமனை, ரேஷன் கடை திறப்பு அமைச்சர் சக்கரபாணி திறந்து வைத்தார்
மருத்துவமனை, ரேஷன் கடை திறப்பு அமைச்சர் சக்கரபாணி திறந்து வைத்தார்
ADDED : அக் 18, 2024 07:55 AM

நத்தம்: நத்தம் பகுதியில் ரூ.1.76 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டடங்கள், ரேஷன் கடைகளை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி திறந்து வைத்தார்.
உலுப்பகுடி பொது சுகாதார கட்டடம், அங்கன்வாடி மையம், பகுதி நேர ரேஷன் கடைகளை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் சக்கரபாணி கலைஞர் நுாலகம் அமைக்கும் பணியை பார்வையிட்டார். துணைமுதலமைச்சர் கலந்து கொள்ள உள்ள திருமண விழா மேடையை பார்வையிட்டார். திட்ட இயக்குநர் திலகவதி, ஆர்.டி.ஓ.,சக்திவேல்,முன்னாள் எம்.எல்.ஏ ஆண்டிஅம்பலம், தி.மு.க., மாவட்ட பொருளாளர் க.விஜயன், பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா, தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் ரத்தினக்குமார், பழனிச்சாமி, தர்மராஜன், மோகன், வெள்ளிமலை, நகர செயலாளர் ராஜ்மோகன், ஒன்றிய ஆணையாளர்கள் குமாரவேல்,மகுடபதி, தாசில்தார் விஜயலெட்சுமி, மண்டல துணை தாசில்தார் சுந்தரபாண்டியன் கலந்து கொண்டனர்.