/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'யாரையும் மிரட்டுவதில்லை' அமைச்சர் ஐ.பெரியசாமி திட்டவட்டம்
/
'யாரையும் மிரட்டுவதில்லை' அமைச்சர் ஐ.பெரியசாமி திட்டவட்டம்
'யாரையும் மிரட்டுவதில்லை' அமைச்சர் ஐ.பெரியசாமி திட்டவட்டம்
'யாரையும் மிரட்டுவதில்லை' அமைச்சர் ஐ.பெரியசாமி திட்டவட்டம்
ADDED : மார் 14, 2026 02:58 AM
ரெட்டியார்சத்திரம்: ''யாரையும் மிரட்டுகின்ற தன்மையில் நாங்கள் அரசியல் செய்ததே இல்லை'' என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரத்தில் நடந்த விழாவில் பங்கேற்ற அமைச்சர் ஐ.பெரியசாமியிடம், அரசியலுக்கு வர இருந்த நடிகர் ரஜினியை தி.மு.க., மிரட்டியதாக த.வெ.க., நிர்வாகி ஆதவ் அர்ஜூனாவின் பேச்சு குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, ''ஜனநாயகம் என்பதுதி.மு.க.,வில் மட்டுமே பார்க்க முடியும். யாரையும் மிரட்டுகின்ற தன்மையில் நாங்கள் அரசியல் செய்ததே இல்லை. மக்களை அன்பால் வளைத்து அரசியல் செய்கிறோம். யாரையும் மிரட்டியும் நாங்கள் பேசுவதும் இல்லை. கூட்டணிக்காககெஞ்சவும் இல்லை. ஏற்கனவே 9 ஆண்டுகளாக எந்த காலத்திலும் இல்லாத அளவிற்கு காங்கிரசுடன் கூட்டணி நீடித்து வருகிறது என்பது வரலாறு. தமிழகத்தில் ஒவ்வொரு தேர்தலுக்கும் வரலாறு மாறும். ஆனால் தற்போதும் கூட்டணி வந்துவிட்டது. அடுத்த தேர்தலிலும் 'இண்டி' கூட்டணியுடன் தான் இருப்போம். 15 ஆண்டுகள் இக்கூட்டணியில் எந்த பிரச்னையும் இருக்கப் போவதில்லை. இது சந்தர்ப்பவாத கூட்டணி அல்ல என்றார்.-

