/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அ.தி.மு.க., மக்களிடமிருந்து விலகிச் சென்று விட்டது அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு
/
அ.தி.மு.க., மக்களிடமிருந்து விலகிச் சென்று விட்டது அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு
அ.தி.மு.க., மக்களிடமிருந்து விலகிச் சென்று விட்டது அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு
அ.தி.மு.க., மக்களிடமிருந்து விலகிச் சென்று விட்டது அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு
ADDED : நவ 22, 2024 05:02 AM

கன்னிவாடி: ''தமிழகத்தில், அ.தி.மு.க., மக்களிடமிருந்து விலகி சென்று விட்டது'' என, அமைச்சர் ஐ.பெரியசாமி பேசினார்.
ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு திட்டங்களில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களுக்கான திறப்பு விழாவில் பங்கேற்று அவர் பேசியதாவது: அ.தி.மு.க., ஆட்சியில் வேலை உறுதித் திட்ட பணிக்கு மக்கள் வாடகை வேன்கள் மூலம் அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று தான் வேலை செய்ய முடியும் என்ற நிலைமை இருந்தது.
தி.மு.க., ஆட்சியில் இதனை மாற்றி அந்தந்த ஊராட்சி மக்களுக்கு சம்பந்தப்பட்ட பகுதிகளிலேயே பணி வாய்ப்பு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் வேலைவாய்ப்பு இல்லாத ஊராட்சிகளில் ரோட்டோர மரக்கன்று நடுதல், அவற்றை பராமரித்தல் பணிகள் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தை பேரூராட்சிகளிலும் செயல்படுத்த தி.மு.க., ஆட்சியில்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆத்துார் தொகுதியில் அகரம், கன்னிவாடி பேரூராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
சூழ்நிலைக்கு ஏற்ப தேர்தல் ஆணையம் கூறும் நேரத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான அனுமதியை, முதல்வர் வழங்குவார்.
ஸ்டாலின் தலைமையிலான மக்களாட்சி, எப்பொழுதும் இருக்கும். தமிழக மக்களிடமிருந்து அ.தி.மு.க., கட்சி விலகிப் போய்விட்டது. அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிதான் நடக்கும்.
ஒரு மாவட்டத்தில் நடக்கும் விபத்துக்கள், சம்பவங்களை கொண்டு சட்டம் ஒழுங்கு கெட்டுப் போய்விட்டதாக கூற முடியாது. தவறு செய்தவர் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். 2030க்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் மதிப்புள்ள முதலீடுகளை கொண்டு வருதாக, முதல்வர் கூறியுள்ளார். அதை நோக்கி முதல்வரின் நடவடிக்கைகள் அமைந்துள்ளது என்றார்.
திண்டுக்கல் ஆர்.டி.ஓ., சக்திவேல் தலைமை வகித்தார். திட்ட இயக்குனர் திலகவதி முன்னிலை வகித்தார்.
தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் தண்டபாணி, ஊராட்சி ஒன்றிய தலைவர் சிவகுருசாமி, பி.டி.ஓ.,க்கள் கிருஷ்ணன், மலரவன், மாங்கரை ஊராட்சி தலைவர் பரமேஸ்வரி துணைத் தலைவர் ஆனந்த் ஊராட்சி செயலர் லிங்கசாமி பங்கேற்றனர்.