/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மகளிர் உரிமை தொகைக்காக புதிதாக 2000 பயனாளிகள் அமைச்சர் பெரியசாமி தகவல்
/
மகளிர் உரிமை தொகைக்காக புதிதாக 2000 பயனாளிகள் அமைச்சர் பெரியசாமி தகவல்
மகளிர் உரிமை தொகைக்காக புதிதாக 2000 பயனாளிகள் அமைச்சர் பெரியசாமி தகவல்
மகளிர் உரிமை தொகைக்காக புதிதாக 2000 பயனாளிகள் அமைச்சர் பெரியசாமி தகவல்
ADDED : ஜூன் 27, 2025 12:45 AM

சின்னாளபட்டி: ''மகளிர் உரிமை தொகை திட்டத்தில் ஆத்துார் தாலுகாவில் மட்டும் ஏற்கனவே பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் புதிதாக 2 ஆயிரம் பேர் கொண்ட பட்டியல் தயாராக உள்ளதாக'' அமைச்சர் ஐ.பெரியசாமி பேசினார்.
ஆத்துார் ஒன்றியம் அம்பாத்துறை ஊராட்சியில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மனுக்களை பெற்ற அவர் பேசியதாவது:
தி.மு.க., ஆட்சியில் ஏழை முதியோருக்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகையை அ.தி.மு.க., அரசு நிறுத்தியது. 10 ஆண்டுகளாக இதனை மீண்டும் பெற முடியாமல் தவித்த பெரும்பாலோருக்கு தற்போது மீண்டும் வழங்கப்பட்டு வருகிறது. எஞ்ஜியோருக்கு பெற்று தருவதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும். விடுபட்டோருக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைக்க ஆவண செய்யப்படும்.
ஏற்கனவே பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் ஆத்துார் தாலுகாவில் மட்டும் 2000 பேரை பயனாளிகளாக சேர்க்க பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. விடுபட்டோரும் பயன்பெறும் வகையில் விண்ணப்பங்களில் உள்ள குறைபாடுகள் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆர்.டி.ஓ., சக்திவேல் தலைமை வகித்தார். கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் குருமூர்த்தி, தாசில்தார் முத்துமுருகன், தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகேசன் முன்னிலை வகித்தனர்.
குரும்பபட்டி நடுநிலைப் பள்ளியில் கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்க கோரி மாணவர்கள் மனு அளித்தனர்.