/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தமிழகத்தில் மன்னராட்சி நடக்கவில்லை அமைச்சர் பெரியசாமி மறுப்பு
/
தமிழகத்தில் மன்னராட்சி நடக்கவில்லை அமைச்சர் பெரியசாமி மறுப்பு
தமிழகத்தில் மன்னராட்சி நடக்கவில்லை அமைச்சர் பெரியசாமி மறுப்பு
தமிழகத்தில் மன்னராட்சி நடக்கவில்லை அமைச்சர் பெரியசாமி மறுப்பு
ADDED : மார் 30, 2025 03:08 AM

சின்னாளபட்டி : ''ஏதோ ஒரு கட்சித் தலைவர் கூறியதை போன்று தமிழகத்தில் மன்னராட்சி நடக்கவில்லை. மக்களுக்கான, பெண்களுக்கான ஆட்சி தான் நடக்கிறது''என அமைச்சர்பெரியசாமி தெரிவித்தார்.
வேலை உறுதி திட்ட பயனாளிகள் சம்பளத்திற்கு நிதி ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து தி.மு.க., சார்பில் மாவட்டத்தில் 20 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது . திண்டுக்கல்தெற்கு ஒன்றியம் சார்பில் பள்ளப்பட்டியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலர் வெள்ளிமலை தலைமை வகித்தார். மா.மு. கோவிலுாரில்ஒன்றிய செயலர் நெடுஞ்செழியன் தலைமைவகித்தார்.ஆத்துார் ஒன்றியம் சார்பில் பித்தளைப்பட்டி விலக்கில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார். மாவட்ட அவை தலைவர் காமாட்சி, பொருளாளர் சத்தியமூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் நடராஜன், ஒன்றிய முன்னாள் தலைவர் மகேஸ்வரி, திண்டுக்கல் மாநகர பொருளாளர் சரவணன் முன்னிலை வகித்தனர்.
அமைச்சர்பெரியசாமி பேசியதாவது : மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் வேலை உறுதி திட்டம் கொண்டுவரப்பட்டு தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டது .திண்டுக்கல் மாவட்டத்தில் 2006 -10 ஆட்சி காலத்தில் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி ஜனாதிபதி விருது பெறப்பட்டது. 4034 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது. தி.மு.க.,வை பழிவாங்குவதாக எண்ணி கிராம ஏழை மக்களின் வயிற்றில் மத்திய அரசு அடிக்கிறது. வேலை உறுதி திட்ட நிதியை நிறுத்தி வைத்தால் மக்கள் மத்தியில் போராட்டம் வெடிக்கும். ஏதோ ஒரு கட்சி தலைவர் கூறியதைப் போல் தமிழகத்தில் மன்னர் ஆட்சி நடக்கவில்லை. சமூக நீதிக்கான, மக்களுக்கான, பெண்களுக்கான மக்களாட்சி தான் நடக்கிறது என்றார்.
வடமதுரை: தென்னம்பட்டி நால்ரோட்டில் மேற்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் சுப்பையன் தலைமை வகித்தார். நகர செயலாளர் கணேசன், மாவட்ட நிர்வாகிகள் இளங்கோ, கார்த்திகேயன், ராமகிருஷ்ணன், ஒன்றிய நிர்வாகிகள் செந்தில்முருகன், அன்பழகன் பங்கேற்றனர்.
நிலக்கோட்டை : மைக்கேல் பாளையத்தில் மேற்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் மேற்கு ஒன்றிய செயலாளர் கரிகால பாண்டியன் தலைமை வகித்தார். தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் தலைமையில் ராமராஜபுரத்திலும், தெற்கு ஒன்றிய செயலாளர் கனிக்குமார் தலைமையில் விருவீடு, வடக்கு ஒன்றிய செயலாளர் முருகன் தலைமையில் விராலிபட்டியிலும் போராட்டம் நடந்தது.
ஒட்டன்சத்திரம்:தொப்பம்பட்டி வடக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் இடையகோட்டையில் ஒன்றிய செயலாளர் ஜோதீஸ்வரன் தலைமை வகித்தார். ஒன்றிய அமைத்தலைவர் செல்லமுத்து முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர்.
ஒட்டன்சத்திரம் மேற்கு ஒன்றியம் சார்பில் சத்திரப்பட்டியில் ஒன்றிய செயலாளர் தர்மராஜ் தலைமை வகித்தார். மத்திய ஒன்றியம் சார்பில் தங்கச்சியம்மாபட்டியில் ஒன்றிய செயலாளர்கள் எஸ் .ஆர் .கே .பாலு தலைமை வகித்தார். துணைசெயலாளர்கள் முருகானந்தம், சிவபாக்கியம் ராமசாமி முன்னிலை வகித்தனர். இதேபோல் ஓடைப்பட்டி, கேதையுறும்பு, கணக்கன்பட்டி, தொப்பம்பட்டி, தேவத்தூர், அப்பியம்பட்டி நால்ரோடு, கள்ளிமந்தையம், புஷ்பத்துார் மேல்கரைப்பட்டியிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.