/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
புறநகர் பஸ் ஸ்டாண்ட் பணியை ஜன.7ல் முதல்வர் துவக்கி வைப்பார் அமைச்சர் பெரியசாமி தகவல்
/
புறநகர் பஸ் ஸ்டாண்ட் பணியை ஜன.7ல் முதல்வர் துவக்கி வைப்பார் அமைச்சர் பெரியசாமி தகவல்
புறநகர் பஸ் ஸ்டாண்ட் பணியை ஜன.7ல் முதல்வர் துவக்கி வைப்பார் அமைச்சர் பெரியசாமி தகவல்
புறநகர் பஸ் ஸ்டாண்ட் பணியை ஜன.7ல் முதல்வர் துவக்கி வைப்பார் அமைச்சர் பெரியசாமி தகவல்
ADDED : டிச 21, 2025 06:02 AM

திண்டுக்கல்: ''திண்டுக்கல் புறநகர் பஸ் ஸ்டாண்ட் பணியை ஜன. 7 ல் வரும் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கலாம்''என அமைச்சர் பெரியசாமி கூறினார்.
பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதற்கும் முதல்வர் ஸ்டாலின் ஜன.7ல் திண்டுக்கல் வருகிறார். இதுகுறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அமைச்சர்கள் பெரியசாமி, சக்கரபாணி தலைமையில் நடந்தது.
கலெக்டர் சரவணன், சச்சிதானந்தம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் செந்தில்குமார், காந்திராஜன், அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர். அமைச்சர் பெரியசாமி கூறியதாவது:
மாவட்டத்தில் முடிக்கப்பட்ட பணிகள், அடிக்கல் நாட்டும் பணிகள் என ரூ.3 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கு அர்ப்பணிக்கிறார். 2 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. புறநகர் பஸ் ஸ்டாண்ட் குறித்து ஏற்கனவே சட்டசபையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் இதையும் துவக்கிவைக்க வாய்ப்புள்ளது.
திண்டுக்கல் மாநகராட்சி விரிவாக்கத்திற்கு தீர்மானம் இயற்றப்பட்டுள்ள நிலையில் 100 நாள் வேலைவாய்ப்பு பறிபோகும் என்ற கருத்தின் அடிப்படையில் விரிவாக்க திட்டத்திற்கு மக்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.
சிறுமலையை சுற்றுலாத்தலமாக அறிவிப்பதற்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள பல்லுயிர் பூங்காவும் முதல்வர் நிகழ்ச்சியின்போது திறந்துவைக்கப்படும். திட்டங்கள் இப்போதைக்கு வருமா, வராதா எனக்கேட்க வேண்டாம். அனைத்தையும் பாசிட்டிவாக கேளுங்கள். அனைத்தும் வரும். பணிகள் மின்னல் வேகத்தில் நடக்கும் என்றார்.

