/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நலத்திட்டங்கள் வீடு தேடி செல்கிறது அமைச்சர் பெரியசாமி பெருமிதம்
/
நலத்திட்டங்கள் வீடு தேடி செல்கிறது அமைச்சர் பெரியசாமி பெருமிதம்
நலத்திட்டங்கள் வீடு தேடி செல்கிறது அமைச்சர் பெரியசாமி பெருமிதம்
நலத்திட்டங்கள் வீடு தேடி செல்கிறது அமைச்சர் பெரியசாமி பெருமிதம்
ADDED : ஜூன் 14, 2025 12:21 AM

செம்பட்டி: ''அனைத்து நலத்திட்டங்களும் வீடு தேடி செல்கிறது''என அமைச்சர்பெரியசாமி பேசினார்.
வக்கம்பட்டி தனியார் கல்லுாரி வளாகத்தில் நடந்த ஆத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட 431 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்ட பணி ஆணை, நல உதவிகளை வழங்கிய அவர் பேசியதாவது: ஏழை மக்களுக்கு வீடுகள் வழங்கும் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 8 லட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது. 2 லட்சம் வீடுகள் முடிக்கப்பட்டு உள்ளது. இந்தாண்டிற்காக இதுவரை ஒரு லட்சம் பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வீடற்றவர் யாரும் இல்லை என்ற நிலை உருவாகி வருகிறது. மக்களுக்கான மக்களாட்சியை முதல்வர் ஸ்டாலின் நடத்தி வருகிறார். எல்லோருக்கும் எல்லாம் என்ற நிலை உருவாகி வருகிறது.
அனைத்து நலத்திட்டங்களும் வீடு தேடி செல்கிறது. பிரதமர் மேம்பாட்டு சாலைகள், சில இடங்களில் சேதம் அடைந்துள்ளது. அவற்றையும் சீரமைக்க உத்தரவிடப்பட்டு அதற்கான பணிகள் விரைவில் துவங்க உள்ளது என்றார்.
கலெக்டர் சரவணன் தலைமை வகித்தார். சச்சிதானந்தம் எம்.பி., ஆர்.டி.ஓ., சக்திவேல் முன்னிலை வகித்தனர்.ஆத்துார் ஒன்றிய முன்னாள் தலைவர் முருகேஸ்வரி, கிழக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் முருகேசன், பி.டி.ஓ., தட்சிணாமூர்த்தி பங்கேற்றனர்.