ADDED : பிப் 11, 2024 01:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் பேகம்பூர், மேட்டுப்பட்டி, நத்தம் ரோடு பகுதி சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ்செயல்படும் பள்ளி, விடுதிகளை சிறுபான்மையினர் நலன் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சிகே.எஸ்.மஸ்தான், உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு செய்தனர்.
மேயர் இளமதி, துணை மேயர் ராசப்பா, கவுன்சிலர்கள் பிலால், ரோஸ்மேரி, வக்பு வாரிய ஆய்வாளர் பரக்கத்துல்லா, வக்பு வாரியம் முபாரக், சிறுபான்மையினர் நல அலுவலர் மாரி பங்கேற்றனர்.