/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல்லில் புதிய சி.டி., ஸ்கேன் மையம் அமைச்சர்கள் திறந்து வைத்தனர்

ADDED : ஜூன் 28, 2025 11:50 PM

திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்ட சி.டி., ஸ்கேன், டிஜிட்டல் எக்ஸ்ரே, புளூரோஸ்கோபி மையத்தை அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, மா.சுப்பிரமணியன், அர. சக்கரபாணி திறந்துவைத்தனர்.
திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் ரூ. 2.20 கோடி மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட சி.டி., ஸ்கேன் கருவியை ரூ.61 லட்சத்து 29 ஆயிரம் மதிப்பில் டிஜிட்டல் எக்ஸ்ரே, புளூரோஸ்கோபி கருவிகள் திறப்புவிழா நடந்தது.
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உணவு வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி திறந்துவைத்தனர்.
கலெக்டர் சரவணன், மருத்துவக்கல்லுாரி முதல்வர் சுகந்தி ராஜகுமாரி தலைமை வகித்தனர்.சச்சிதானந்தம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், செந்தில்குமார், காந்திராஜன் பங்கேற்றனர்.
இது போல் பழநி ரோட்டில் உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் நலத்திட்டங்களை வழங்கினர்.