/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மகளிர் தொகை வேண்டி 13 லட்சம் மனுக்கள் : அமைச்சர் சக்கரபாணி
/
மகளிர் தொகை வேண்டி 13 லட்சம் மனுக்கள் : அமைச்சர் சக்கரபாணி
மகளிர் தொகை வேண்டி 13 லட்சம் மனுக்கள் : அமைச்சர் சக்கரபாணி
மகளிர் தொகை வேண்டி 13 லட்சம் மனுக்கள் : அமைச்சர் சக்கரபாணி
ADDED : ஆக 21, 2025 07:43 AM

ஒட்டன்சத்திரம் : ''தமிழ்நாட்டில் இதுவரை மகளிர் உரிமை தொகை வேண்டி 13 லட்சம் மனுக்கள் வந்துள்ளன '' என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
ஒட்டன்சத்திரம் சத்திரப்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம், சமூக நீதி கல்லுாரி மாணவியருக்கான விடுதி , இடும்பக்குடும்பன்பட்டி, டி.கே .என். புதுார், திப்பம்பட்டியில் பகுதி நேர ரேஷன் கடை , தொட்டையம்மன் கோயில் அருகே நங்காஞ்சி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட புதிய பாலத்தை திறந்து வைத்த அவர் பேசியதாவது: தமிழகம் முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் இதுவரை 30 லட்சம் மனுக்கள் பெறப்பட்டதில் மகளிர் உரிமைத்தொகை வேண்டி 13 லட்சத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் வந்துள்ளன. இவற்றிற்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றார்.
ஆர்.டி.ஓ., கண்ணன், தாசில்தார் சஞ்சய் காந்தி, பி,டி.ஓ.,க்கள் காமராஜ், பிரபு பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் ஜோதீஸ்வரன், தர்மராஜ், பாலு, துணைச்செயலாளர்கள் முருகானந்தம், சிவபாக்கியம் ராமசாமி கலந்து கொண்டனர்.