ADDED : நவ 24, 2024 04:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் மாயமான 16 வயது பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
திண்டுக்கல் அருகே குட்டியபட்டி பிரிவில் உள்ள தோட்டத்து கிணற்றில் பெண் உடல் மிதப்பதாக தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விசாரணையில் திண்டுக்கல் மேட்டுப்பட்டி விஸ்தரிப்பு ஏரியா 4வது தெருவை சேர்ந்த நம்பிக்கை ஜோஸ்பினா 16, என்பது தெரிந்தது.
இவர் தனியார் பள்ளியில் 9 ம் வகுப்பு படித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். நவ.21ல் வீட்டை விட்டு வெளியேறியவர் வீடு திரும்பவில்லை.
திண்டுக்கல் நகர் தெற்கு போலீசார் தேடி வந்த நிலையில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்தது தெரிய தெரியவந்தது. அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர்.

