UPDATED : அக் 14, 2026 09:21 PM
ADDED : அக் 14, 2026 09:18 PM
அ நிறம் | அளவு
கொடைரோடு: ‘எல் நினோ’ தாக்கத்தால் கோடை வெப்பத்தை காட்டிலும் வெயில் வாட்டுகிறது. தென்மேற்கு பருவமழை கை கொடுக்கவில்லை. இதனால் கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. வறட்சியை சமாளிக்க மழை ஒன்றே தீர்வாக உள்ளது.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை எம்.எல்.ஏ., அய்யனார், த.வெ.க.,வினர் அம்மையநாயக்கனுார் முத்துமாரியம்மன் கோயிலில் மழை வேண்டி மண் சோறு சாப்பிட்டனர். முன்னதாக நடந்த மழை வேண்டி நடந்த யாகத்திலும் எம்.எல்.ஏ., மற்றும் கட்சியினர் பங்கேற்றனர்.
