/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பொங்கல் தொகுப்பு வழங்கிய எம்.எல்.ஏ.,
/
பொங்கல் தொகுப்பு வழங்கிய எம்.எல்.ஏ.,
ADDED : ஜன 11, 2026 05:47 AM
வடமதுரை: பிலாத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாக ரேஷன் கடையில் அரசின் பொங்கல் பரிசு தொகுப்பை எம்.எல்.ஏ., காந்திராஜன் வழங்கினார். அப்போது அவர், முதல் நாளில் பொங்கல் பரிசு பெற பல இடங்களில் அதிகளவில் மக்கள் ஒருசேர வந்திருந்தனர்.
வினியோக பணிகள் சென்னை அலுவலக சர்வர் மூலம் நடப்பதால் கைரேகை பதிவு செய்வதில் மதியம் வரை தாமதம் இருந்து பின்னர் சீரானது.
ஜன.14 வரை பரிசு தொகுப்பு வழங்குவதால் கிடைக்காது என்ற அச்சம் வேண்டாம் என்றார்.
கூட்டுறவு செயலாட்சியர்கள் கார்த்திகை செல்வி, திராவிடமொழி முன்னிலை வகித்தனர். செயலாளர் முருகேசன் வரவேற்றார்.
தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் சுப்பையன், பாண்டி, நிர்வாகிகள் சொக்கலிங்கம், செந்தில்முருகன், கே.பி.சிவா பங்கேற்றனர்.

