/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வேடசந்துார் பஸ் ஸ்டாண்ட் இடமாற்றம் புதிய இடத்தை பார்வையிட்ட எம்.எல்.ஏ.,
/
வேடசந்துார் பஸ் ஸ்டாண்ட் இடமாற்றம் புதிய இடத்தை பார்வையிட்ட எம்.எல்.ஏ.,
வேடசந்துார் பஸ் ஸ்டாண்ட் இடமாற்றம் புதிய இடத்தை பார்வையிட்ட எம்.எல்.ஏ.,
வேடசந்துார் பஸ் ஸ்டாண்ட் இடமாற்றம் புதிய இடத்தை பார்வையிட்ட எம்.எல்.ஏ.,
ADDED : ஜன 26, 2025 04:41 AM
வேடசந்துார்: வேடசந்துார் பஸ் ஸ்டாண்டுக்கான புதிய கட்டடம் கட்ட உள்ளதால் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைய உள்ள இடத்தை எம்.எல்.ஏ., காந்திராஜன் பார்வையிட்டார்.
வேடசந்துார் பஸ் ஸ்டாண்ட் கட்டடம் சேதமடைந்ததால் இடிக்கப்பட்டது. இருந்தும் இன்று வரை அதே இடத்தில் செயல்பட்டு வருகிறது. புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டடம் கட்டும் பணியை விரைந்து துவக்க தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க பேரூராட்சி சார்பில் ரூ. 1.19 கோடி ஒதுக்கப்பட்டது. இதை தொடர்ந்து பஸ் ஸ்டாண்டை ஆத்துமேடு தங்கராஜா தியேட்டர் அருகே தற்காலிகமாக அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஆலோசனை கூட்டத்திற்கு எம்.எல்.ஏ., காந்திராஜன் தலைமை வகித்தார்.
பேரூர் தி.மு.க.,செயலாளர் கார்த்திகேயன், பேரூராட்சி செயல் அலுவலர் மரிய அந்தோணியூஜின், தாசில்தார் சிக்கந்தர், அரசு போக்குவரத்து டிப்போ மேலாளர் அசோக், தி.மு.க., போக்குவரத்து தொழிற்சங்க செயலாளர் காளைமேகம், இன்ஸ்பெக்டர் வேலாயுதம், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் திரவியம் பங்கேற்றனர். இதன் இடத்தை எம்.எல்.ஏ., காந்திராஜன் பார்வையிட்டார்.
திண்டுக்கல் கரூர் செல்லும் பஸ்கள் ஆத்து மேடு நாடக மேடை அருகே நின்று செல்லவும், மற்ற பஸ்கள் ஆத்து மேட்டில் பயணிகளை இறக்கிவிட்டு தற்காலிக பஸ் ஸ்டாண்ட் சென்று வரவும் முடிவானது. இதன்படி நாளை (ஜன. 27) முதல் பஸ் ஸ்டாண்ட் இடம் மாறுகிறது.