/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கொடை' யில் 2 மணி நேரம் மிதமான மழை
/
கொடை' யில் 2 மணி நேரம் மிதமான மழை
ADDED : ஆக 31, 2025 04:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்: - கொடைக்கானலில் நேற்று 2 மணி நேரம் மிதமான மனம பெய்ய மலை நகர் குளிர்ந்தது.
சுற்றுலா நகரில் சில மாதமாக வறண்ட வானிலை நீடித்து வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்தது. தொடர்ந்து மழையில்லாத நிலையில் அருவி, குடி நீர் ஆதாரங்கள் வற்றத் தொடங்கின. நகரில் வாரம் ஒருமுறை குடிநீர் சப்ளை உருவானது. அவ்வப்போது சாரல் மழை பெய்த போதும் பலனளிக்கவில்லை. நேற்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு காலை 11:30 மணிக்கு மிதமான மழை பெய்ய மதியம் 2:00 மணி வரை நீடித்தது. தொடர்ந்து மாலை வரை சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. மழையால் வாரசந்தை வியாபாரிகள்,பொதுமக்கள் அவதியடைந்தனர். காற்றிப் ஈரப்பதம் அதிகரித்து குளிர் நிலவியது.

