/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஆலைகளில் வடமாநில, வெளிநாட்டு தொழிலாளர்கள் அதிகரிப்பை கண்காணியுங்க! அதிகாரிகளின் தணிக்கை, நடவடிக்கைகள் அவசியம் தேவை

ADDED : அக் 03, 2025 01:13 AM

மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் மற்றும் குஜிலியம்பாறை சுற்றுவட்டார பகுதிகள் கடுமையான வறட்சி பகுதியாக இருந்ததால் 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசால் பின்தங்கிய வறட்சி பகுதியாக அறிவிக்கப்பட்டது. இதனால், தமிழக அரசின் மானிய உதவியுடன் இப்பகுதியில் ஏராளமான நூற்பாலைகள் துவங்கப்பட்டன. தற்போதைய சூழ்நிலையில் வேடசந்தூர், வடமதுரை, குஜிலியம்பாறை ஒன்றிய பகுதிகளில் மட்டும் 40 க்கும் மேற்பட்ட நூற்பாலைகளும், மாவட்ட அளவில் 100க்கும் மேற்பட்டவையும் இயங்கி வருகின்றன.
நூற்பாலைகளுக்கு தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டதன் காரணமாக, தென் மாவட்டங்களில் இருந்து தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டனர். தற்போது அதையும் கடந்து, பீகார், குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட வடமாநில தொழிலாளர்கள் கூடுதலானோர் வந்து குவியத் துவங்கி, பரவலாக பல்வேறு நூற்பாலைகளில் அங்கேயே தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.
இது ஒரு புறம் இருக்க, ஒட்டன்சத்திரம் பகுதியில் வங்காளதேசத்தைச் சேர்ந்த 31 பேர், சட்ட விரோதமாக தங்கி பணியாற்றுவது தெரிய வந்ததை தொடர்ந்து, சிறை தண்டனை வழங்கப்பட்டு, நாடு கடத்தும் பணிகள் நடந்து வருகிறது. இதுமட்டுமின்றி, பெரும்பாலான நூற்பாலைகளில் இன்றைய கால சூழ்நிலையில், வடமாநில தொழிலாளர்களே கூடுதலாக பணியில் உள்ளனர். இதனால், மாவட்டத்தைச் சேர்ந்த மக்களுக்கு போதிய வேலை வாய்ப்பு இன்றி உள்ளனர்.
மாவட்ட நிர்வாகம் நூற்பாலைகளில் பணிபுரியும் வட மாநிலம் மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களை கண்காணிக்கவும், முறையான அனுமதி இன்றி பணியில் உள்ளவர்களை அப்புறப்படுத்தவும் முன் வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.