/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநி கிரிவீதியில் கண்காணிப்பு குழு ஆய்வு
/
பழநி கிரிவீதியில் கண்காணிப்பு குழு ஆய்வு
ADDED : ஏப் 19, 2025 12:52 AM

பழநி:பழநி சன்னதி வீதி, கிரிவீதியில் உயர் நீதிமன்ற கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்தனர்.
பழநி கிரி வீதியில் ஆக்கிரமிப்பு அகற்றம், தனியார் வாகன பயன்பாட்டிற்கு தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனை கண்காணிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் சார்பில் ஓய்வு நீதிபதி பாரதிதாசன் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு நீதிமன்றத்திற்கு அறிக்கைகள் சமர்ப்பித்து வருகின்றனர். நேற்று பாரதிதாசன் தலைமையிலான குழுவினர் கோயில் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர். அதன்பின் கிரிவீதி ,சன்னதி வீதியில் ஆய்வு செய்தனர். கலெக்டர் சரவணன், எஸ்.பி., பிரதீப், கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து, கோயில் முன்னாள் இணை கமிஷனர் நடராஜன் பங்கேற்றனர்.

