/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஒட்டன்சத்திரத்துக்கு அதிக நிதி அமைச்சர் சக்கரபாணி தகவல்
/
ஒட்டன்சத்திரத்துக்கு அதிக நிதி அமைச்சர் சக்கரபாணி தகவல்
ஒட்டன்சத்திரத்துக்கு அதிக நிதி அமைச்சர் சக்கரபாணி தகவல்
ஒட்டன்சத்திரத்துக்கு அதிக நிதி அமைச்சர் சக்கரபாணி தகவல்
ADDED : ஆக 06, 2025 01:11 AM
ஒட்டன்சத்திரம் : ''தமிழ்நாட்டிலேயே ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு தான் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ''அமைச்சர் சக்கரபாணி பேசினார்.
ஒட்டன்சத்திரம் நகராட்சி கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் பேசியதாவது:
தமிழ்நாட்டிலே ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு தான் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு நடைபெறும் திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
கவுன்சிலர்கள் தங்களுடைய வார்டில் விட்டு போன பணிகளை தெரிவித்தால் அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
நகராட்சி தலைவர் திருமலைசாமி தலைமை வகித்தார். துணைத் தலைவர் வெள்ளைச்சாமி, கமிஷனர் ஸ்வேதா முன்னிலை வகித்தனர். பொறியாளர் சுப்பிரமணிய பிரபு, மேலாளர் ரவி, நகராட்சி வருவாய் ஆய்வாளர் விஜய் பால் ராஜ், கணக்காளர் சரவணன், நகர் நல அமைப்பு அலுவலர் தன்ராஜ் கலந்து கொண்டனர்.