/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
முருங்கை விலை விர்... ஒரே நாளில் கிலோ ரூ.10 அதிகரிப்பு
/
முருங்கை விலை விர்... ஒரே நாளில் கிலோ ரூ.10 அதிகரிப்பு
முருங்கை விலை விர்... ஒரே நாளில் கிலோ ரூ.10 அதிகரிப்பு
முருங்கை விலை விர்... ஒரே நாளில் கிலோ ரூ.10 அதிகரிப்பு
ADDED : செப் 24, 2024 05:21 AM

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் முருங்கை விலை ஒரே நாளில் கிலோ ரூ.10 அதிகரித்து ரூ. 55 க்கு விற்பனையானது.
ஒட்டன்சத்திரம், கப்பலப்பட்டி, அம்பிளிக்கை, கள்ளிமந்தையம், இடையகோட்டை, மார்க்கம்பட்டி, சாலைப் புதுார் சுற்றிய பகுதிகளில் முருங்கை அதிகமாக பயிரிடப்படுகிறது. கரும்பு முருங்கை, செடி முருங்கை, மரம் முருங்கை என மூன்று வகையான முருங்கைக்காய் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
சில வாரம் முன்பு அறுவடை மும்முரமாக இருந்ததால் வரத்து கணிசமாக அதிகரிக்க விலை சரிவடைந்து கிலோ ரூ.10க்கு விற்பனை ஆனது.
தற்போது முருங்கை அறுவடை முடியும் தருவாயில் மார்க்கெட்டிற்கு வரத்து மிகவும் குறைந்து விலை ஏறுமுகமாக காணப்பட்டது.
நேற்று முன்தினம் கரும்பு முருங்கை கிலோ ரூ.45-க்கு விற்ற நிலையில் நேற்று கிலோ ரூ .10 அதிகரித்து ரூ.55க்கு விற்பனையானது. ரூ.42க்கு விற்ற செடி முருங்கை ரூ.50, ரூ.38க்கு விற்ற மரம் முருங்கை ரூ.40க்கு விற்பனையானது. மாவட்டத்தின் பிறபகுதிகளில் உள்ள சில்லரை கடைகளில் முருங்கை கிலோ ரூ.100 க்கு விற்பனையானது. அறுவடை முடியும் தருவாயில் முருங்கை விலை அதிகரித்துள்ளது விவசாயிகளிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
கமிஷன் கடை உரிமையாளர் மூர்த்தி கூறியதாவது: முருங்கை விளைச்சல் முடியும் தருவாயில் இருப்பதால் வரத்து குறைந்து விலை ஏற்றம் அடைந்து வருகிறது. இன்னும் சில நாட்களில் கிலோ ரூ.100 வரை விற்பதற்கு வாய்ப்பு உள்ளது என்றார்.