ADDED : அக் 31, 2024 03:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அம்பிளிக்கை, கப்பலப்பட்டி, காவேரியம்மாபட்டி, இடையகோட்டை, மார்க்கம்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் செடி முருங்கை அதிகமாக விளைவிக்கப்படுகிறது.
இப்பகுதிகளில் தற்போது முருங்கை அறுவடை செய்யப்பட்டு வரும் நிலையில் மார்க்கெட்டுக்கு வரத்து அதிகமாக உள்ளது. இதன் காரணமாக விலை நாளுக்கு நாள் குறைந்தபடி இருந்தது.
10 நாட்களுக்கு முன்பு கிலோ செடி முருங்கை ரூ. 45க்கு மேல் விற்றது. நேற்று கிலோ செடி முருங்கை ரூ.20க்கு விற்றது. தொடர்ந்து முருங்கை விலை குறைவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இனி வரும் நாட்களில் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.