/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஒட்டன்சத்திரத்தில் முருங்கை விலை சரிவு/
/
ஒட்டன்சத்திரத்தில் முருங்கை விலை சரிவு/
ADDED : மார் 18, 2024 07:04 AM
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் முருங்கை கிலோ ரூ.18க்கு விற்பனையானது.
ஒட்டன்சத்திரம் கப்பலப்பட்டி, அம்பிளிக்கை, கள்ளிமந்தையம், இடையகோட்டை, மார்க்கம்பட்டி, சாலைப்புதுார் சுற்றியுள்ள பகுதிகளில் முருங்கை அதிகமாக விளைவிக்கப்படுகிறது. கடந்த 3 வாரங்களுக்கு முன்பு செடிமுருங்கை கிலோ ரூ.65 க்கு விற்றது. இந்நிலையில் தற்போது பல இடங்களில் முருங்கை அறுவடை தொடர்வதால் மார்க்கெட்டிற்கு வரத்து பல மடங்கு அதிகரித்து உள்ளது.
இதன் காரணமாக விலை சரிவடைந்து கிலோ ரூ.18க்கு விற்றது. முருங்கை விலை தொடர்ந்து குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
கமிஷன் கடை உரிமையாளர் முருகேசன் கூறுகையில்,இனி வரும் நாட்களில் வரத்து இன்னும் அதிகரிக்கும் என்பதால் விலை இன்னும் குறைய வாய்ப்பு உள்ளது என்றார்.

