sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

புதர் மண்டிய சாக்கடையில் கொசுக்கள் உற்பத்தி ஜோர்

/

புதர் மண்டிய சாக்கடையில் கொசுக்கள் உற்பத்தி ஜோர்

புதர் மண்டிய சாக்கடையில் கொசுக்கள் உற்பத்தி ஜோர்

புதர் மண்டிய சாக்கடையில் கொசுக்கள் உற்பத்தி ஜோர்


ADDED : ஜன 17, 2025 07:04 AM

Google News

ADDED : ஜன 17, 2025 07:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அச்சப்படுத்தும் மின் கம்பம் : நிலக்கோட்டை தாலுகா அம்மைய நாயக்கனுார் பேரூராட்சி பொம்மணம்பட்டி மெயின் தெருவில் மின் கம்பத்தின் அடியில் சிமென்ட் பூச்சுக்கள் பெய்ந்து கம்பிகள் தெரிகிறது. பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சப்படுகின்றனர். --க.ரதிஷ் பாண்டியன்,- பொம்மணம்பட்டி.

சேதமான ரோட்டில் பள்ளம் : எரியோட்டில் இருந்து கரூர் செல்லும் ரோடு சேதமடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் பள்ளம் தெரியாமல் கீழே விழுகின்றனர். பெரும் விபத்துக்கு முன் ரோட்டை சீரமைக்க வேண்டும்.

-செந்தில்குமார், எரியோடு.

செயலற்ற நிலையில் கேமரா : மாரம்பாடியில் இருந்து தாடிக்கொம்பு செல்லும் ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா செயலற்ற நிலையில் உள்ளது.கேமராக்களை சரி செய்து மீண்டும் செயல்படுத்த துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அ.சந்திரசேகர், மாரம்பாடி.

தெரு நாய்கள் தொல்லை : ஒட்டன்சத்திரம் நகராட்சி காந்திநகர் பகுதியில் தெரு நாய்கள் அதிகமாக சுற்றித் திரிவதால் குழந்தைகள், பெண்கள் பயத்துடன் நடந்து செல்ல வேண்டியுள்ளது. தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க -வேண்டும்.

-வேலவன், ஒட்டன்சத்திரம்.

கொசுக்கள் உற்பத்தி ஜோர் : திண்டுக்கல் 33வது வார்டு மேற்கு மரியானாதபுரம் நாயக்கர் தோட்ட தெருவில் சாக்கடையில் செடிகள் வளர்ந்து புதர் மண்டி உள்ளது.இதனால் கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக உள்ளது. இதை துார்வார வேண்டும்.

-மேரி, திண்டுக்கல்.

----குப்பையால் சுகாதாரக்கேடு : திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் குப்பை மலைபோல் குவிந்துள்ளது .பல நாட்களாக அள்ளாமல் உள்ளதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது .பிளாஸ்டிக் கலந்த குப்பையால் பாதிப்பு ஏற்படுகிறது. குப்பையை அகற்ற வேண்டும்.

-சின்னத்துரை, நாகல்நகர்.

கழிவு நீருடன் தேங்கும் தண்ணீர் : திண்டுக்கல் மலைக்கோட்டை செல்லும் நுழைவுப் பகுதியில் கழிவு நீருடன் தண்ணீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் சிரமப்படுகின்றனர் . இதை சரி செய்ய மாநகராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும்.

-முத்துக்குமரன், திண்டுக்கல்.






      Dinamalar
      Follow us